• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவில் கணிசமாக அதிகரிக்கும் கொரோனா! 24 மணி நேரத்தில் 12,885 பேருக்கு பாதிப்பு!!

இந்தியாவில் கணிசமாக அதிகரிக்கும் கொரோனா! 24 மணி நேரத்தில் 12,885 பேருக்கு பாதிப்பு!!

இந்தியாவில் கணிசமாக உயரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கணிசமாக உயரும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 1,047 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்காக 10,895 பேர் (Active Cases) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Share this:
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் பதிவானதை விட 14 சதவீதம் அதிகம் என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில், 11,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

    நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 3 கோடியே 43 லட்சத்து 21 ஆயிரத்து 25-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் (Active Cases)எண்ணிக்கை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 579 ஆக குறைந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 461 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 59 ஆயிரத்து 652 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தொடர்ந்து 27 வது நாளாக கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 1,047 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்காக 10,895 பேர் (Active Cases) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 6 ஆயிரத்து 493 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில், 26 லட்சத்து 59 ஆயிரத்து 407 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 36 ஆயிரத்து 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதேபோன்று அண்டை மாநிலமான கேரளாவில், நேற்று ஒரே நாளில் மட்டும் 7,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: