Home /News /national /

corona cases in india: வேகமாகப் பரவும் கொரோனா: நாலாந்தா, பாட்டியாலா கல்லூரிகளில் 259 பேருக்கு கொரோனா

corona cases in india: வேகமாகப் பரவும் கொரோனா: நாலாந்தா, பாட்டியாலா கல்லூரிகளில் 259 பேருக்கு கொரோனா

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கல்வி நிலையங்களில் வேகமாக கொரோனா பரவி வருகிறது, ஒரே நாளில் 72 டாக்டர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாலந்தா மருத்துவக் கல்லூரியில் 159 மருத்துவர்கள், பாட்டியாலா மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கல்வி நிலையங்களில் வேகமாக கொரோனா பரவி வருகிறது, ஒரே நாளில் 72 டாக்டர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாலந்தா மருத்துவக் கல்லூரியில் 159 மருத்துவர்கள், பாட்டியாலா மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,007 பேர் குணமடைந்துள்ளனர். 124 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,46,70,18,464 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை 4,82,017 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில் பஞ்சாப்பில் பாட்டியாலா அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில மருத்துவர்களுக்கு அறிகுறி தென்பட்டதால், கடந்த ஜனவரி 2-ம் தேதியன்று 194 மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 84 மருத்துவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்தது. இன்று மேலும் 72 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

    கடந்த வாரம் பொறியியல் கல்லூரி ஒன்றில் 93 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் கடந்த 4 வாரங்களில் 300 சதவீத கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

    23 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1892 ஓமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஐஐடி காரக்பூரில் 40 மாணவர்கள் உட்பட 60 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பரவலையொட்டி டெல்லியில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அல்லது லாக் டவுன் பிறப்பிக்கப்படவுள்ளது, இதனையடுத்து சனி, ஞாயிறுகளில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் பணிக்கு வந்தால் போதும் - மத்திய அரசு!
     ஒடிசாவில் தினசரி கொரோனா பாதிப்பு 60% அதிகரித்துள்ளது. திங்களன்ரு 424 கேஸ்கள் என்றால் இன்று 680 பேருக்குக் கொரோனா தொற்றியுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona positive, Covid-19, India, Omicron

    அடுத்த செய்தி