Home /News /national /

பூஸ்டர் டோஸ்: கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.1200ல் இருந்து ரூ.225 ஆக குறைப்பு

பூஸ்டர் டோஸ்: கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.1200ல் இருந்து ரூ.225 ஆக குறைப்பு

Covaxin

Covaxin

Booster dose for adult: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பட்சத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம். இது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறையில் வரவுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.1200ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தினசரி பாதிப்பும் சொற்ப அளவிலேயே பதிவாகி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை திரும்பப்பெற்றுள்ளன. எனினும், சர்வதேச அளவில் புதிது புதிதாக உருமாறிய கொரோனா தொற்றுகள் பரவி வருவதால் 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.  தற்போது,  18 வயது கடந்தவர்களுக்கான  கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு  அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி,  18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பட்சத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம். இது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறையில் வரவுள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை  தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளலாம்.

    இதையும் படிங்க: மே 3ஆம் தேதி உஷாராக இருங்கள் - மாநிலங்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை... காரணம் என்ன?


    இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் விலையை பாரத் பயோடெக் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. இது தொடர்பாக  பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான சுசித்ரா இலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ அனைத்து பெரியவர்களுக்கும் முன்னெச்சரிக்கை மருந்தை (பூஸ்டர் டோஸ்) வழங்குவதற்கான முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, தனியார் மருத்துவமனைகளுக்கு, COVAXIN இன் விலையை ஒரு டோஸுக்கு ரூ.1200ல் இருந்து ரூ.225 ஆக மாற்ற முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

    இதேபோல் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையும் ரூ.600ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona Vaccine, Covaxin

    அடுத்த செய்தி