ஹோம் /நியூஸ் /இந்தியா /

சீனாவில் கொடூரமாக பரவி வரும் BF.7 வகை வைரஸ் இந்தியாவிலும் பரவியது - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

சீனாவில் கொடூரமாக பரவி வரும் BF.7 வகை வைரஸ் இந்தியாவிலும் பரவியது - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கொரோனா

கொரோனா

கொரோனாவின் நேர்மறை மாதிரிகளின் முழு மரபணு வரிசை முறையையும் கண்காணிக்க மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனாவில் வேகமாக பரவி மரணங்களை அதிகரித்துள்ள உருமாறிய கொரோனா BF.7 வகை பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்ததில், கொரோனா இன்னும் முடிவடையவில்லை, விழிப்புடன் இருக்கவும் என்று மாண்டவியா ட்வீட் பதிவிட்டுள்ளார். எதனால் இந்த அறிவிப்பு? மத்திய சுகாதாரதுறையின் கூட்டத்தில் நடந்தது என்ன?

உலகை உருக்குலைத்துப் போட்ட கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. சீனாவில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து, தற்போது மரணங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் பல்வேறு துறை வல்லுநர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

சுகாதாரம், மருந்துத் துறை, பயோடெக்னாலஜி துறை, ஆயுஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ராஜீவ் பால், நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இந்திய - சீன வீரர்கள் மோதல் : நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

இக்கூட்டத்தில், சீனாவில் பரவி வரும் ஓமிக்ரான் மாறுபாடு வகை கொரோனா BF.7 இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் BF.7 கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது BF.7 என்பது ஓமிக்ரான் மாறுபாடு BA.5 இன் துணைப் வகையாம். இது அதி வேகத்தில் பரவக்கூடியது. ஆனால் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கண்டறிப்பட்ட இவ்வகை கொரோனா அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக இல்லை என கூறப்பட்டுள்ளது.

எனவே பிற நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கொரோனாவின் நேர்மறை மாதிரிகளின் முழு மரபணு வரிசை முறையையும் கண்காணிக்க மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

விமானப் போக்குவரத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 28 சதவிகிதம் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

First published:

Tags: China, Corona, India