இந்தியாவில் 3,000-த்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு! 68-ஆக அதிகரித்த உயிரிழப்பு

இந்தியாவில் 3,000-த்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு! 68-ஆக அதிகரித்த உயிரிழப்பு
கோப்புப் படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஊஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. கடந்த ஒரு வார காலமாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று இரவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,547 ஆக இருந்தது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62-ஆக இருந்தது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்துக்குள் 478 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்துள்ளது.


Also see:
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading