• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Corona 2nd Wave | கொரோனா 2-வது அலை: மோடியின் தவறுகளுக்கு ஹர்ஷவர்தன் பலிகடா- கார்கே தாக்கு

Corona 2nd Wave | கொரோனா 2-வது அலை: மோடியின் தவறுகளுக்கு ஹர்ஷவர்தன் பலிகடா- கார்கே தாக்கு

மல்லிகார்ஜுன் கார்கே.

மல்லிகார்ஜுன் கார்கே.

கொரோனா 2ம் அலை பாதிப்பு விவகாரத்தில் பொறுப்புகளை தான் ஏற்காமல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை பலிகடாவாக்கி விட்டதாக பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாகச் சாடினார்.

  • Share this:
    கொரோனா 2ம் அலை பாதிப்பு விவகாரத்தில் பொறுப்புகளை தான் ஏற்காமல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை பலிகடாவாக்கி விட்டதாக பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாகச் சாடினார்.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக கூடியது.

    எதிர்க்கட்சிகள் அமளிகளுக்கு இடையே இன்று மதியம் 1 மணிக்கு மேல் மாநிலங்களவை நடைபெற்றது. காகிதங்களை கிழித்தெறிந்து பதாகைகளை ஏந்தியும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    Also Read: உன் கீழாடை மிகவும் குட்டையாக உள்ளது, எல்லாம் தெரிகிறது: அவமானப்படுத்தப்பட்ட மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் வீராங்கனை

    எதிர்கட்சியினரின் தொடர் அமளியால் மாநிலங்களவை மீண்டும் மதியம் 1.34 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவை மூன்றாவது முறையாக மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்பட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையின்போது மற்றவர்களுக்கு ஆக்சிஜன் விநியோகம், பிளாஸ்மா தானம் செய்து உதவியர்களை நான் வணங்குகிறேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது. ஆனால் பல மாநில தேர்தலில் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். உங்களது விதமுறைகளை நீங்களே மீறுகிறீர்கள். கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

    Also Read: 10வயது மகனுடன் ஆபாச நடனமாடிய தாய்.. இணையத்தில் வைரலான வீடியோ -விசாரணையில் இறங்கிய மகளிர் ஆணையம்

    பாத்திரங்களை தட்டச் சொல்லியும், மெழுகுவர்த்தியை ஏத்தச் சொல்லியும் மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். மக்களும் அவரை நம்பி அனைத்தையும் செய்தனர். ஆனால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். இதற்கான பழியை தான் ஏற்றுக்கொள்ளாமல் சுகாதாரத் துறை மந்திரியை (ஹர்ஷவர்தன்) பலிகடா ஆக்கிவிட்டார் என கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: