Home /News /national /

சோளக்கருது விலை 15 ரூபாயா.. சாலை வியாபாரியிடம் பேரம் பேசிய அமைச்சர்.. வைரலாகும் வீடியோ

சோளக்கருது விலை 15 ரூபாயா.. சாலை வியாபாரியிடம் பேரம் பேசிய அமைச்சர்.. வைரலாகும் வீடியோ

அமைச்சர் பேரம் பேசிய வீடியோ வைரல்

அமைச்சர் பேரம் பேசிய வீடியோ வைரல்

வியாபாரியிடம் தான் பேரம் பேசி சோளம் வாங்கும் இந்த வீடியோவை அமைச்சரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைச்சர் ஒருவர் சோளக்கருது விற்ற வியாபாரியிடம் பேரம் பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் பாஜக அரசின் ஆட்சி நடைபெறுகிறது. இதில் அமைச்சராக இருப்பவர் பக்கன் சிங் குலாஸ்தே. இவர் இரண்டு நாள்களுக்கு முன்பு அங்குள்ள சிவனி என்ற பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் சாலை வியாபாரி ஒருவர் சோளக்கருது விற்பதை பார்த்து காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்து கீழே இறங்கி வியாபாரியிடம் சென்று தனக்கு சோளக்கருது தருமாறு கேட்டுள்ளார்.

    அந்த வியாபாரியிடம் அவர் சோளக்கருது வாங்கி பேரம் பேசியது தான் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வியாபாரியிடம் சென்று மூன்று சோளக்கருது தருமாறு கேட்கும் அமைச்சர், எவ்வளவு விலை எனக் கேட்டார். அதற்கு வியாபாரி ஒன்றின் விலை ரூ.15. மூன்றுக்கும் சேர்த்து ரூ.45 தாருங்கள் என்றுள்ளார். என்னது ஒரு கருது விலை 15 ரூபாயா என்று அதிர்ச்சியாக கேட்கும் அமைச்சர் விலை ரொம்ப ஜாஸ்தியாக இருக்கேப்பா என பதிலுக்கு பேரம் பேசினார்.


    அதற்கு வியாபாரி இது தான் சரியா விலைங்க. நீங்க கார்ல வரீங்கனு அதிக விலைக்குலாம் விக்கலைங்க என்று பதில் அளித்தார். என்னப்பா இங்க சோளக்கருதுலா ப்ரீயாவே கிடைக்கும் என சலித்துக்கொண்டே கடைசியாக வியாபாரி கேட்ட தொகை தந்துவிட்டு சோளக்கருதை கையில் எடுத்துக்கொண்டு காரில் ஏறிச் சென்றார் அமைச்சர்.

    இதையும் படிங்க: சீருடையிலேயே லிப்லாக் முத்த போட்டி.. வைரலான வீடியோவால் சிக்கிய கல்லூரி மாணவர்கள்.. 8 பேர் மீது போக்சோ வழக்கு

    15 ரூபாய்க்காக வியாபாரியிடம் அமைச்சர் ஒருவர் பேரம் பேசியது வைராலகி வரும் நிலையில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் அமைச்சரை விமர்சித்தும் உள்ளது. அமைச்சர் பாவம் ரொம்ப ஏழை அவருக்கு ரூ.15 பெரிய தொகை. அப்படி என்றால் சாமானியர்களின் நிலையை நினைத்து பாருங்கள் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஊடகத் தலைவர் கே கே மிஸ்ரா விமர்சித்துள்ளார்.

    இதில் ஹைலைட் என்னவென்றால், வியாபாரியிடம் தான் பேரம் பேசி சோளம் வாங்கும் இந்த வீடியோவை அமைச்சரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது போன்ற சாலை வியாபாரியிடம் பொருள்களை வாங்கி அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என பதிவில் அவர் கூறியுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Minister, Viral Video

    அடுத்த செய்தி