பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் போலீஸார் ஷூ அணிந்து செல்லக்கூடாது – உச்ச நீதிமன்றம்

பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் போலீஸார் ஷூ அணிந்து செல்லக்கூடாது – உச்ச நீதிமன்றம்
பூரி ஜெகந்நாதர் கோவில்
  • News18
  • Last Updated: October 11, 2018, 7:13 PM IST
  • Share this:
ஒடிஸா மாநிலம், பூரி நகரிலுள்ள ஜெகந்நாதர் கோவிலுக்குள் போலீஸார் துப்பாக்கிகளை ஏந்திச் செல்வதற்கும், காலணிகளை (ஷூக்கள்) அணிந்து செல்வதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பூரி நகரில் உலகப் பிரசித்திபெற்ற ஜெகந்நாதர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 3-ம் தேதி சோதனை முயற்சியாக பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  'ஸ்ரீஜெகந்நாத் சேனா’ என்னும் அமைப்பு சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் பெரும் கலவரம் வெடித்தது. இதில் கோவில் அலுவலகமும், கோவிலையொட்டிய காவல் நிலையமும் சூறையாடப்பட்டன.


போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீஸார் காலணி அணிந்தவாறு  துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது.

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போலீஸாரின் செயலைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் மதன் பி லோக்கூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பி, ``இந்தச் சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஜெகந்நாதர் கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் துப்பாக்கிகளை ஏந்தியோ, காலணிகளை அணிந்தோ செல்லக் கூடாது’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்