ஹோம் /நியூஸ் /இந்தியா /

Helicopter Crash : விங் கமாண்டரின் இறப்பு செய்தியை டிவியில் பார்த்து மயங்கிய தாய் - துயர தருணங்கள்

Helicopter Crash : விங் கமாண்டரின் இறப்பு செய்தியை டிவியில் பார்த்து மயங்கிய தாய் - துயர தருணங்கள்

Wing Commander PS Chauhan

Wing Commander PS Chauhan

ஹெலிகாப்டர் நொருங்கி விபத்துக்குள்ளானதும், அதில் இருந்தவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற ரீதியில் இருந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தாயார் மயங்கி விழுந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், உயர் ராணுவ அதிகாரிகள் என உயிரிழந்த 13 பேரில் விங் கமாண்டர் பி.எஸ்.சவுகானும் ஒருவர்.

விபத்தில் சிக்கிய எம்.ஐ17 வி5 ரக ஹெலிகாப்டரின் தலைமை பைலட் தான் பி.எஸ்.சவுகான். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவைச் சேர்ந்த அவர் தனது தாயார் சுசிலா சவுகானுடன் கடைசியாக கடந்த செவ்வாயன்று இரவு தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால் அது தான் தனது மகனுடன் பேசும் கடைசி உரையாடல் என்பதை அப்போது சுசிலா அறிந்திருக்கவில்லை.

மறுநாள் மதியம் கோவை மாவட்டம் சூலூரில் இருந்து பி.எஸ்.சவுகான் ஓட்டிச் சென்ற ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்த செய்தியை, பி.எஸ்.சவுகானின் மாமனார் தொலைபேசி மூலம் சவுகானின் தாயிடம், தெரிவித்து டிவியை பார்க்குமாறு கூறியிருக்கிறார்.

டிவியை பார்த்த அவர், தனது மகன் சென்ற ஹெலிகாப்டர் நொருங்கி விபத்துக்குள்ளானதும், அதில் இருந்தவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற ரீதியில் இருந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தாயார் மயங்கி விழுந்துள்ளார்.

இந்த கோர விபத்தில் மறைந்த விங் கமாண்டர் பி.எஸ்.சவுகானுக்கு மனைவி, 12 வயதில் மகள் மற்றும் 9 வயதில் ஒரு மகன் உள்ளனர். சவுகான் குடும்பத்தில் இளைய மகன், அவருக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருக்கின்றனர். அனைவரிடத்திலும் மிகவும் பேசக்கூடிய என் மகன் இறந்ததை டிவி செய்திகள் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தோம் என சவுகானின் தந்தை சுரேந்திர சிங் சவுகான் கண்ணீருடன் தெரிவித்தார்.

Also read:  உதகையில் படித்தவர்.. ராணுவ குடும்பத்தை சேர்ந்த ஜெனரல் பிபின் ராவத்தின் பின்னணி

மறைந்த சவுகானின் மூத்த சகோதரிகளுள் ஒருவரான மினா சிங் கூறுகையில், 31 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டில் தான் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று சகோதரிகள் அனைவரும் என் தம்பியை சந்தித்து அளவளாவினோம். நாங்கள் என்ன கேட்டாலும் எங்களுக்காக கேட்டதை வாங்கி வந்துவிடுவான் என உணர்ச்சிவசமாக குறிப்பிட்டார் அவர்.

இந்த விபத்து நடைபெறாமல் இருந்திருந்தால் அடுத்த 10 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் குன்னூரை அடைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் முன்பாக சுற்றுலா பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் அந்த ஹெலிகாப்டர் வெண் பனிமூட்டத்தின் நடுவே தடுமாறி சென்று எங்கேயோ மோதுவது போல இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Army Chief General Bipin Rawat, Helicopter Crash, Indian army