திருமண விருந்தில் எச்சிலை துப்பி சமையல்காரர் ஒருவர் ரொட்டி சுடுகிறார். இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் மோதி நகரில் உள்ள கோவிந்தபுரி காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு நடைபெற்ற திருமண விருந்தில் ஒருபக்கம் ஆடல் பாடலுடன் நிகழச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அருகே விருந்து ஏற்பாடு நடைபெற்றது.
இதில் சமையல் காரர் ரொட்டிகளை தயாரிக்கிறார். அவ்வாறு தயாரிக்கும்போது தனது எச்சிலை துப்பி துப்பி ரொட்டி மாவை, அடுப்புக்குள் வைக்கிறார்.
இந்த காட்சியை மாடியில் இருந்து ஒருவர் வீடியோ எடுக்க, தற்போது இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சமையல்காரர் செய்த இந்த நாகரிகமற்ற செயலை ஏற்க முடியாது என்று கூறியுள்ள நெட்டிசன்கள், சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க - அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய ஸ்வீட் பாக்ஸை சீனாவுக்கு அனுப்பிய கூரியர் நிறுவனம்.. நீதிமன்ற தீர்ப்பால் கஸ்டம்ர் ஹேப்பி
இதுதொடர்பாக விசாரணை நடத்தியுள்ள போலீசார் சமையல்காரரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க - ஆந்திராவில் கிராம மக்களுக்கு 2 வாரம் லாக்டவுன்... கொரோனாவை விட கொடிய காரணம்
இதேபோன்ற சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டும் நடந்துள்ளன. இங்குள்ள பஞ்சார்பூர் மாவட்டம் தவுசா என்ற கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், எச்சிலை துப்பி சமையல்காரர்கள் நான் ரொட்டிகளை தயாரித்துள்ளனர். இதைப் பார்த்தவர்கள் அளித்த புகாரின்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.