கேரள அரசின் பெண்கள் பேரணி - முதல்வர் பினராயி விஜயன் மீது எழுந்த சர்ச்சை

கேரள அரசின் பெண்கள் பேரணியை மேற்பார்வை செய்யும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சி.பி.சுகந்தன் நியமிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏழுந்துள்ளது.

news18
Updated: December 4, 2018, 4:00 PM IST
கேரள அரசின் பெண்கள் பேரணி - முதல்வர் பினராயி விஜயன் மீது எழுந்த சர்ச்சை
கேரள அரசின் பெண்கள் பேரணியை மேற்பார்வை செய்யும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சி.பி.சுகந்தன் நியமிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏழுந்துள்ளது.
news18
Updated: December 4, 2018, 4:00 PM IST
கேரள அரசு சார்பில் நடைபெறவுள்ள பெண்கள் பேரணியின் ஒருங்கிணைப்பாளராக போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.சுகந்தன் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடுக்கு ஆதரவு உருவாக்கும் வகையில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ‘பெண்களுக்கான சுவர்’(Women's wall) என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் மிகப் பெரும் பேரணி நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. ஜனவரி 1-ம் தேதி காசர்கோட்டில் தொடங்கவுள்ள இந்தப் பேரணி திருவனந்தபுரம் வரை செல்லவுள்ளது.

இந்தப் பேரணியை ஒருங்கிணைக்கும் பணிக்காக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேற்பார்வை குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக சி.பி.சுகந்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, சபரிமலை கோயில் நடைதிறப்பின்போது பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகளால் மிகப் பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது நிறைய வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றது.

அந்தப் போராட்டத்தில் இந்த சி.பி.சுகந்தன் என்பவர் முன் வரிசையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டவர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள என்.டி.டி.வி நிருபர் சினேகா கோஷி., ‘எங்களை, சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்தான் சி.பி.சுகந்தன். அவர் தற்போது, கேரளாவில் நடைபெறவுள்ள பெண்களுக்கான பேரணியை மேற்பார்வை செய்யும் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக அம்மாநில முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘முன்னதாக, இவர்கள் வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுத்திருக்கலாம். ஆனால், தற்போது நம்முடன் இணைந்து செயல்படுவதற்காக வந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Also see:
Loading...
First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்