Home /News /national /

”இயேசு தான் உண்மையான கடவுள்”- ராகுல் காந்தியிடம் பாதிரியார் பேசிய பேச்சால் சர்ச்சை!

”இயேசு தான் உண்மையான கடவுள்”- ராகுல் காந்தியிடம் பாதிரியார் பேசிய பேச்சால் சர்ச்சை!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜார்ஜ் பொன்னையாவின் பின்னணி குறித்தும் விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் நடைபெற்ற பாதிரியார்கள் சந்திப்பில் இயேசு தான் உண்மையான கடவுள் என பாதிரியார் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸின் இந்திய ஒற்றுமை பயணம், இன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தில் பல்வேறு தரப்பு மக்களை, மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று ஜார்ஜ் பொன்னைய்யா தலைமையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் சிலர் ராகுல்காந்தியை சந்தித்துள்ளனர். அப்போது இயேசு கிறிஸ்துவர்களின் கடவுள் என கூறிய ஜார்ஜ் பொன்னையாவிடம் ராகுல்காந்தி, இயேசு கடவுளின் ஒரு வடிவம் தானே என கேட்டார். அதற்கு பதிலளித்த ஜார்ஜ் பொன்னைய்யா, “இல்லை இயேசு உண்மையான கடவுள் தான், அவர் மற்ற சக்திகள் போல இல்லாமல் தன்னை மனித உருவத்தில் வெளிக்காட்டியதே இயேசு” என விளக்கமளித்தார்.

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என நடைபெறும் இந்த பயணத்தில், இவ்வாறு இயேசு தான் உண்மையான கடவுள் எனவும் மற்ற சக்திகள் போல் இல்லை எனவும் ஜார்ஜ் பொன்னையா, ராகுல் காந்தியிடம் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.



இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜார்ஜ் பொன்னையாவின் பின்னணி குறித்தும் விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம், பாதிரியார் ஸ்டோன்ஸ் சுவாமி நினைவஞ்சலி கூட்டத்தில், சர்ச்சையாக பேசியதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் வாசிக்க: சிலரைப் போல் நான் பாஜக முன் கை கூப்பி சமரசம் செய்யமாட்டேன் - ராகுல் காந்தி திட்டவட்டம்

அந்த கூட்டத்தில் பேசிய அவர், பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி, பூமித்தாயை மதிப்பதாக சொல்லி செருப்பு போடாமல் இருப்பது மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ், சேகர் பாபு ஆகியோர் இந்து ஆலயங்களுக்கு செல்வது ஆகியவற்றை விமர்சித்து பேசியது சர்ச்சையானது. மேலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மலர கிறிஸ்தவர்களே காரணம் எனவும் திமுக ஆட்சி நாங்கள் போட்ட பிச்சை எனக் கூறியிருந்தார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Kanniyakumari, Pastor, Rahul gandhi

அடுத்த செய்தி