Home /News /national /

ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம்... கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா அறிவிப்பு

ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம்... கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா அறிவிப்பு

கர்நாடக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஈஸ்வரப்பா

கர்நாடக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஈஸ்வரப்பா

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதல் பெயராக ஈஸ்வரப்பா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக குற்றம் சாட்டப்படும் அமைச்சர் ஈஸ்வரப்பா தற்போது ராஜினாமா அறிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரப்பா, 'நாளை எனது ராஜினாமா கடிதத்தை முதல் அமைச்சரிடம் அளிக்க உள்ளேன்' என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சில மணி நேரத்திற்கு முன்பு விளக்கம் அளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, ஈஸ்வரப்பா தனது அமைச்சரவையில் தொடர்வார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஈஸ்வரப்பா ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் ஊழலுக்கு எதிராக செயல்படுவோம் என்று பாஜக கூறி வரும் நிலையில், ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பாஜக மேலிடமே ஈஸ்வரப்பா ராஜினாமா செய்வதற்கு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க - புறநகர் ரயிலில் பயணித்தவர் செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ!

    உடுப்பியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல், தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, அவர் தனது தற்கொலைக்கு மந்திரி ஈஸ்வரப்பாதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, சந்தோஷ் பட்டீல் அளித்திருந்த லஞ்சப் புகாரின் அடிப்படையில்,அவரது தற்கொலை வழக்கில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் அமைச்சக ஊழியர்கள் ரமேஷ், பசவராஜ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பொதுப் பணித் துறை ஒப்பந்தம் ஒன்றை சந்தோஷ் பட்டீல் மேற்கொண்டிருந்த நிலையில், அதற்கு உரிய தொகையை அமைச்சகம் விடுவிக்காமல் இருந்தது. தொகையை விடுவிக்கக் கோரி சந்தோஷ் பல முறை வலியுறுத்தியும், தொகையை வெளியிட வேண்டும் என்றால் 40 சதவீதம் லஞ்சம் தர வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் கேட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க - டெல்லியில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!! அச்சத்தில் மக்கள்!

    இது குறித்து வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்த சந்தோஷ் பட்டீல், கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதல் பெயராக ஈஸ்வரப்பா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Karnataka

    அடுத்த செய்தி