வடமாநிலங்களில் நீடிக்கும் மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு...!

ஒடிசாவில் இன்று முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமாநிலங்களில் நீடிக்கும் மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு...!
மழை
  • News18
  • Last Updated: August 2, 2019, 8:08 AM IST
  • Share this:
குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 7 பேரும், ராஜஸ்தானில் 3 பேரும் உயிரிழந்தனர். 

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

விஷ்வமித்ரி ஆற்றில் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது. வதோதரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 பேர் உயிரிழந்தனர்.


வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மேடான பகுதிகளை நோக்கி பொதுமக்கள் தங்களது உடைமைகளுடன் வெளியேறி வருகின்றனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட கோவிந்த் சவ்டா என்ற காவலர், பிறந்த 45 நாட்களே ஆன சிசுவை பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து தலையில் சுமந்து சென்று காப்பாற்றினார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்காக புனே-விலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் வதோதராவுக்கு நேற்றிரவு சென்று சேர்ந்தன. வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் பகுதியில் கனமழை காரணமாக அரசு பள்ளிகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.ராஜஸ்தான் மாநிலத்தின் நக்பானி பகுதியில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவர் மீட்கப்பட்டார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சத்புரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. தர்பங்கா பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்நிலையில், வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் படிக்க... கொடைக்கானல் பூண்டுக்கு புவிசார் குறியீடு...!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading