தெலங்கானாவில் தொடர்ந்து பெய்யும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

தெலங்கானாவில் தொடர்ந்து பெய்யும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்

தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஐதராபாத் உட்பட நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.மேலும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. இதன் எதிரொலியாக, தெலங்கானாவில் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த மழையால் தெலங்கானாவில் ஐதராபாத் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வெளியேறாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால் குல்பர்கா மாவட்டத்தில் (Gulbarga), குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், சிக்கியவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மேலும் படிக்க... சென்னை - மைலாப்பூர், மெரினா, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை..

மேலும், பெங்ளூரு நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன், புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் மக்கள், தாங்களாகவே மிதவைகளை உருவாக்கி அதன் மூலம் வெளியேறி வருகின்றனர்.கனமழையால் கிராம பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன், கால்வாய்கள், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

தெலங்கானாவில் ஆரஞ்சு எச்சரிக்கை

இந்நிலையில், மத்திய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள பேரிடர் மீட்பு படையினர் ஆயத்தமாகியுள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published: