ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆதார் இருந்தால் போதும்... நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் - மத்திய அரசு

ஆதார் இருந்தால் போதும்... நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் - மத்திய அரசு

ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம்

ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம்

Ration Shop | ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரில் உறுப்பினர் ஒருவர் கேள்விக்கு உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் பதிலளித்தார். அப்போது அவர் ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம் (Ration Shop) முக்கிய தகவலை வெளியிட்டார்.

அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013இன் கீழ், நாட்டின் வறுமை கோட்டின் கீழ் உள்ள சுமார் 80 கோடி பயனாளர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய அரசு முனைப்புடன் உள்ளது. அதற்காக தான் ஒரு நாடு ஒரு ரேஷன் (Ration Card)  திட்டத்தை நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மொத்தமாக இதுவரை 93.31 கோடி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 'Mera Ration' என்ற செயலி 13 மொழிகளில் செயல்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுமார் 20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே, பயனாளர்கள் இனி ஆதார் எண், பயோமெட்ரிக் அடையாளத்தை வைத்து நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

First published:

Tags: Aadhaar card, Aadhar, Ration Goods, Ration Shop