அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் இந்தியாவில் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் - ம.பி பாஜக தலைவர் கருத்து

கோப்புப்படம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

 • Share this:
  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வருமென்று பாஜக தலைவர் ராமேஸ்வர் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிண் எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்துள்ளது.

  கொரோனா வைரஸை தடுக்க இதுவரை எந்தவித தடுப்பு ஊசியும் உலக சுகாதார அமைப்பினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்தியா உட்பட பல நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வெளியிடுவதற்கான இறுதி பணியில் உள்ளன.

  இந்நிலையில், மத்தியபிரதேச பாஜக தலைவர் ராமேஸ்வர் சர்மா அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கியதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறையும் என்றுள்ளார். மேலும் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் சமூக இடைவெளியை பராமரிப்பது மட்டுமில்லாமல், புனித நபர்களையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்றுள்ளார்.

  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published: