வெள்ளத்தில் குழந்தைகளை 1.5 கி.மீ தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய காவலர்! வைரல் வீடியோ

கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக 69 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல, கர்நாடகம், மஹாராஷ்டிராவிலும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் குழந்தைகளை 1.5 கி.மீ தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய காவலர்! வைரல் வீடியோ
வெள்ளம்
  • News18
  • Last Updated: August 11, 2019, 3:49 PM IST
  • Share this:
குஜராத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த இரண்டு சிறுவர்களை தோளில் வைத்து 2 கி.மீ தூரம் வரை தூக்கிச் சென்ற காவலருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அம்மாநில முதல்வரும் காவலரின் பணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையின் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக 69 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல, கர்நாடகம், மஹாராஷ்டிராவிலும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை வெள்ளத்தில் குழந்தைகளை தோளில் தூக்கிச் சென்ற காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்திலுள்ள கிராமம் வெள்ளத்தின் காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. அந்த கிராமத்தில் இடுப்பளவு உள்ள நீரில் இரண்டு குழந்தைகளை தோளில் தூக்கிக்கொண்டு காவலர் சுமார் 1.5 கி.மீ தூரம் நடந்து சென்று குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதனையடுத்து, அந்த வீடியோ தனது ட்விட்டரில் பதிவிட்ட அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி, ‘அரசு ஊழியர்களின் கடின உழைப்பு, உறுதி, அர்பணிப்பு ஆகியவற்றுக்கு காவலர் ப்ரூதிவிராஜ்சின் ஜடேஜா உதாரணம். அவருடைய அர்பணிப்பை பாராட்டவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:

First published: August 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading