Home /News /national /

பொது தேர்வில் சாதித்த ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்... CA படிக்க சாதனை பயணம்

பொது தேர்வில் சாதித்த ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்... CA படிக்க சாதனை பயணம்

பொது தேர்வில் சாதித்த ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்

பொது தேர்வில் சாதித்த ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்

அறுவை சிகிச்சை மூலம் கூட பிரிக்க முடியாத இந்த இரட்டையர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

    வீணா மற்றும் வாணி என்ற இரண்டு பெண்கள் தெலுங்கானா மாநில இன்டர்மீடியட் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கி பொதுத் தேர்வுகளில் முன்னணியில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த இரு பெண்களும் 70% சதவிகிதம் மதிப்பெண் வாங்கி, CA படிக்க விருப்பம் இருப்பதாக அடுத்த கட்டத்துக்கு செல்லவிருப்பது உண்மையில் மிகப்பெரிய சாதனை தான். சில ஆண்டுகளுக்கு முன் கூட, இவர்களைப் பற்றிய செய்தி வைரலானது. அறுவை சிகிச்சை மூலம் கூட பிரிக்க முடியாத இந்த இரட்டையர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

    உலகின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களில், வீணா மற்றும் வாணியும் ஒருவர்! இரண்டு வெவ்வேறு பெண்களாக மற்ற உறுப்புகள் முழுமையாக இருந்தாலும், இவர்கள் இருவரின் தலையும் பிரிக்க முடியாது. அன்றாட செயல்களே சவாலாக காணப்பட்டாலும், இந்த இரட்டைப் பெண்கள் அதை எளிதாக ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறார்கள்.

    தெலுங்கானா மாநிலம் நடத்திய இன்டர்மீடியட் தேர்வில், காமர்ஸ், எகனாமிக்ஸ் குருப்பைத் தேர்ந்தெடுத்து, இருவரும் முதல் வகுப்பில் தேர்வாகி உள்ளனர். வீணா, 1000 மதிப்பெண்ணுக்கு 707 மதிப்பெண்ணும், வாணி 1000 மதிப்பெண்ணுக்கு 712 மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த இரண்டு நிலை தேர்வுகளில், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர் என்றும், மொத்தமே 60% தான் தேர்ச்சி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் அமர்வது, சாப்பிடுவது என்று எல்லாவற்றிலும் தலை ஒட்டியிருப்பதால் அசௌகரியமாக இருக்கும் என்றாலும், இவர்களுக்கு பரிட்சை ஹாலில் எந்த வித சலுகையும் வழங்கப்படவில்லை. மற்ற மாணவர்களைப் போலத் தான் இவர்களுக்கும் தேர்வுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தத் தேர்வில் மட்டுமல்லாமல், 2020 ஆம் ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் வீணா 9.3 GPA மற்றும் வாணி 9.2 GPA மதிப்பெண்கள் பெற்றனர். அப்போதே தங்கள் இருவருக்கும் CA படிக்க வேண்டும் என்ற ஆசையும் லட்சியமும் இருப்பதாகத் தெரிவித்தனர்.

    Also Read : கொட்டும் மழையில் தார் ரோடு போட்ட ஒப்பந்ததாரர்.. பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட்

    கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இந்த இரட்டை பெண்களுக்கு, பெண்கள் நலத்துறை அமைச்சரான சத்யவதி ரத்தோட் வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்தித்து பாராட்டியும் உள்ளார். மேலும், இந்த இரண்டு பெண்களின் உயர்கல்விக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து தரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

    2003 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பிறந்த வீணா மற்றும் வாணியை பிரிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், இவர்களின் பெற்றோர் இவர்களை வளர்க்கவும், பராமரிக்கவும் வசதியில்லை என்று விட்டுச் சென்றனர். 12 வயதில் இவர்கள் நிலோபர் மருத்துவமனையில் இவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தனர். பின்னர், தெலுங்கானா மாநில அரசின் பராமரிப்பில் சேர்க்கப்பட்டனர். பெற்றோர்கள் கைவிட்ட நிலையில், பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலிலும், இவர்கள் தொடர்ந்து கல்வியில் சாதனை செய்து வருவது பலருக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்!
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி