• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ட்விட்டரிலிருந்து வெளியேறிய திவ்யா ஸ்பந்தனா! என்ன காரணம்?

ட்விட்டரிலிருந்து வெளியேறிய திவ்யா ஸ்பந்தனா! என்ன காரணம்?

திவ்யா ஸ்பந்தனா

திவ்யா ஸ்பந்தனா

இதற்கிடையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, ‘மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார்.

    நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனையடுத்து, தோல்வி குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

    அவரது முடிவை, காரியக் கமிட்டி நிராகரித்தது. இருப்பினும், தலைவர் பதவியைத் தொடர்வது குறித்து ராகுல் காந்தி பதிலளிக்கவில்லை. அதனையடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் டி.வி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, ‘மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில், திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் வெளியேறியுள்ளார்.

    அவரது ட்விட்டர் கணக்கு, தற்போது பயன்பாட்டில் இல்லை. திவ்யா ஸ்பந்தனா, ட்விட்டரில் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ளவர். தேர்தல் காலங்களில் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மோடியை விமர்சித்தும் பல பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டுவந்தார். அவருடைய பதிவுக்கு மக்களிடையை நல்ல வரவேற்புகள் கிடைத்துவந்தன. இருப்பினும், திவ்யா ட்விட்டரிலிருந்து வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: