முகப்பு /செய்தி /இந்தியா / ஆம் ஆத்மி இல்லை என்றால் குஜராத்திலும் பாஜகவை தோற்கடித்திருப்போம் - ராகுல் காந்தி கருத்து

ஆம் ஆத்மி இல்லை என்றால் குஜராத்திலும் பாஜகவை தோற்கடித்திருப்போம் - ராகுல் காந்தி கருத்து

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

நாட்டில் பல எதிர்க்கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ் அந்த கட்சிகளில் இருந்து மாறுபட்ட தேசிய கட்சி என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rajasthan, India

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை 100 நாள்களை நிறைவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயணம் நிறைவடைந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இந்த பயணம் 100 நாள்களை கடந்தது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து முக்கிய கருத்தை பகிர்ந்து கொண்டார். இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை, குஜராத்திலோ, மாபெரும் வெற்றி பெற்று காங்கிரஸை படுதோல்வி அடைய செய்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த ராகுல் குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து முதல்முறையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "பாஜக மிகப்பெரிய அமைப்பு பலம் கொண்ட கட்சியாகும். ஆனால், அவர்களை இமாச்சலில் காங்கிரஸ் வீழ்த்தி காட்டியுள்ளது. வெளிப்படையாகக் கூறினால், ஆம் ஆத்மி கட்சி இல்லை என்றால் குஜராத்திலும் பாஜகவை நாங்கள் வீழ்த்தி இருப்போம். அங்கு காங்கிரஸை குறிவைப்பதற்காக ஆம் ஆத்மி களமிறக்கப்பட்டது. பிராந்திய கட்சிகளால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ மாநிலத்தையோ மட்டுமே முன்னிறுத்த முடியும். நாட்டில் எத்தனையோ எதிர்க்கட்சிகள் உள்ளன. அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் ஏற்கிறோம்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் நிவாரணம் தர முடியாது - பீகார் முதல்வர் திட்டவட்டம்

அதேவேளை, தேசிய சிந்தனையை முன்னிறுத்தும் காங்கிரஸ் கட்சி அவர்களை விட தனித்துவமானவர்கள். நாங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கான சிந்தனை கொண்டு செயல்படுபவர்கள்" என்று தெரிவித்தார். குஜராத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜக 156 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 இடங்களை மட்டுமே வென்ற நிலையில், புதுமுகமான ஆம் ஆத்மி 5 இடங்களை கைப்பற்றியது.

First published:

Tags: Aam Aadmi Party, BJP, Congress, Gujarat, Rahul gandhi