நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறித்து இன்று நடைபெறவுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவெடுக்கப்படவுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அசாதாராண சூழல் நிலவி வருகிறது. பல்வேறு மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகி வருகின்றனர். சமீபத்தில் கபில் சிபில், அமரிந்தர் சிங், குலாம் நபி ஆசாத் ஆகியவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகினர். இதில் குலாம் நபி ஆசாத் 50 ஆண்டு காலம் காங்கிரஸில் பயணித்து, கடந்த 26ஆம் தேதி விலகினார். மேலும் அவரது விலகல் கடிதத்தில் ராகுல் காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டுகள் முன்வைத்திருந்தார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா காந்தியும் சென்றுள்ளார். குலாம் நபி ஆசாதின் விலகல் தொடர்பாக எந்திவித அறிக்கையும் காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிடவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் தலைவரை தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக கட்சியின் அதிகாரமிக்க காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும்.
இதையும் வாசிக்க: ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைமை ஏற்க வலியுறுத்துவோம் - மல்லிகார்ஜுன கார்கே
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் நடைபயண பரப்புரை இருப்பதால், தலைவர் தேர்தல் சில வாரம் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு 21 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய தேதிகளுக்கு இடையே நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Congress leader, Sonia Gandhi