ராகுலின் ராஜினாமாவை ஏற்காத காரிய கமிட்டி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுலின் ராஜினாமாவை ஏற்காத காரிய கமிட்டி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?
ராகுல் காந்தி
  • Share this:
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க, காங்கிரஸ் காரியக் கமிட்டி அடுத்த வாரம் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதனை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்கனவே நிராகரித்துவிட்டது. இந்நிலையில், தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகவும், புதிய தலைவரை காங்கிரஸ் காரிய கமிட்டி விரைவில் கூடி தேர்வுசெய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி நேற்று கூறினார். டுவிட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிய குறிப்பில், காங்கிரஸ் தலைவர் என்ற வார்த்தைகளை ராகுல் காந்தி நீக்கியுள்ளார்.

இதனால், கட்சியின் இடைக்காலத் தலைவராக மூத்த உறுப்பினரான மோதிலால் வோரா செயல்படுவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்துள்ளனர். அடுத்த காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று, ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்கும் வரை, தலைவராக அவரே நீடிப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.


கட்சிக்கு தற்போது நெருக்கடியான நேரம் என்று குறிப்பிட்டுள்ள பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், அனைவரும் ஒருங்கிணைந்து இதனை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஜிதின் பிரசாதா, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா உள்ளிட்ட தலைவர்களும், ராஜினாமா முடிவை ராகுல் காந்தி கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் காரிய கமிட்டியும், மூத்த தலைவர்களும் ஒருங்கிணைந்து ராகுலை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொள்வோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்-பிரியங்கா | CWC
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்


மேலும் ராஜினாமா செய்வதாக அவர் ஏற்கனவே கூறிவிட்டார். தனது நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்த முடியும் என்று நம்புகிறேன். அவர் ஒரு முடிவெடுத்துவிட்டால், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். எனினும், காங்கிரஸ் காரிய கமிட்டியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஒருங்கிணைந்து தற்போதைய சூழலில் அவரை சமாதானப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறினார்.

இதேபோல, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அனைவரையும் இணைக்கும் சக்தியாகவும், மக்களை கவர்ந்திழுக்கும் தலைவராகவும் ராகுல் காந்தியால் மட்டுமே இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முடிவெடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி அடுத்த வாரத்தில் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க... காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகுவதாக தகவல்?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்