‘ட்விட்டர் பறவை’யை பொறித்து டெல்லிக்கு பார்சலில் அனுப்பிய காங்கிரஸ் தொண்டர்கள் - வீடியோ!

twitter bird

ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவில் ஒரு பறவை இடம்பெற்றிருக்கும் அந்த பறவையைத் தான் காங்கிரஸார் பொறிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

  • Share this:
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கியதை கண்டித்து ட்விட்டர் பறவையை எண்ணெயில் போட்டு வறுத்து கண்டனம் தெரிவித்திருக்கின்றனர் ஆந்திர மாநில காங்கிரஸ் தொண்டர்கள் சிலர்.

அண்மையில் டெல்லியில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிறுமியின் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Also Read: தலிபான்கள் ஆட்சியை பிடித்த நாளில் காபுல் வானில் போராடிய இந்திய விமானம் – திக் திக் நிமிடங்கள்!

பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்களின் அடையாளத்தை வெளிக்காட்டியதை சுட்டிக்காட்டிய ட்விட்டர் நிறுவனம், தனது விதிமுறைகளை மீறியதாக கூறி ராகுல் காந்தி வெளியிட்டிருந்த அந்த புகைப்படத்தை நீக்கியதுடன் அவரின் ட்விட்டர் கணக்கையும் முடக்கி வைத்தது. இது தங்களின் வழக்கமான நடவடிக்கை தான் என அவர்கள் விளக்கம் தந்தனர்.இருப்பினும் முக்கிய எதிர்கட்சியின் தலைவர் ஒருவரது கணக்கை முடக்கி வைத்ததாக கூறி காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர். இதன் பின்னர் முடக்கப்பட்ட கணக்கை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.

இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடு பாரபட்சமானது என கூறி ஆந்திய மாநில காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் ட்விட்டர் நிறுவனத்தை கண்டிக்கும் வகையில் நூதனமான முறையில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

Also Read:  இந்தியாவை பாராட்டிய தலிபான்கள்!

ட்விட்டர் பறவையை எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்து அதை பேக் செய்து டெல்லியில் உள்ள ட்விட்டர் அலுவலகத்துக்கு தபாலில் அனுப்பி வைத்திருக்கின்றனர். ட்விட்டர் பறவையை எண்ணெயில் பொறிக்கும் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர். எண்ணெயில் போட்டு பொறித்த பறவையை அவர்கள் சுவைக்கவும் செய்தனர். ஆந்திர மாநில காங்கிரஸ் தொண்டர்களின் இந்த விநோத முறையிலான போராட்டம் சமூக வலைத்தளத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவில் ஒரு பறவை இடம்பெற்றிருக்கும் அந்த பறவையைத் தான் காங்கிரஸார் பொறிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்விட்டர் பறவையை எண்ணெயில் போட்டு பொறித்த அந்த இளைஞர், முன்னாள் எம்.பி ஹர்ஷ குமாரின் மகன் என கூறப்படுகிறது.
Published by:Arun
First published: