ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க கோரி தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி

ராகுல் தலைவராக நீடிக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க கோரி தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: May 30, 2019, 10:29 AM IST
  • Share this:
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிக்க வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற பேரணியில் 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்த ராகுல் காந்தியின் முடிவை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி இதுவரை விளக்கமளிக்கவில்லை. இந்த நிலையில், ராகுல் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை அண்ணா சாலையில் பேரணி நடைபெற்றது.

இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியின்போது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இரு தொண்டர்களை சக தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


5-ஆவது நாளாக ராகுலை சமாதானம் செய்யும் முயற்சி தொடருகிறது

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், 5-ஆவது நாளாக அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்திற்கு முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டு, ராகுலே தலைவராக நீடிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, ராகுலை சமாதானம் செய்ய அவரது இல்லத்திற்கு மூத்த தலைவர் ஷீலா தீட்சித் சென்றார். ஆனால், அவரை சந்திக்க ராகுல் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
சேலத்தில் ராகுலுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயற்சித்த காங்கிரஸ் தொண்டர்


ராகுலுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயற்சி

ராகுல் தலைவராக நீடிக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகர காங்கிரஸ் துணைத் தலைவரான பச்சப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Also see... காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகுவதாக தகவல்

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்