முகப்பு /செய்தி /இந்தியா / 5 மாநில இடைத்தேர்தல் : 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றி..!

5 மாநில இடைத்தேர்தல் : 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றி..!

காங்கிரஸ்

காங்கிரஸ்

நாடு முழுவதும் 6 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம் என 5 மாநிலங்களில் மொத்தமாக 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மேற்கு வங்காள மாநிலம் சாகர்திகி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிஸ்வாஸ், சுமார் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2021 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இடைத்தேர்தல் வெற்றி மூலம் மீண்டும் சட்டப்பேரவைக்குள் காங்கிரஸ் நுழைகிறது. இதனை அக்கட்சியினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.

இதே போன்று, மகாராஷ்டிரா மாநிலம் கஸ்பா பெத் தொகுதியில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தன்கேகர் ரவீந்திர ஹேம்ராஜ், சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். அதே போல் ஈரோடு தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

Also Read : மேகாலயாவில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லை... தேசிய மக்கள் கட்சி தொடர்ந்து முன்னிலை

போட்டியிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் தொகுதியில், பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் முன்னணி வேட்பாளர் வெற்றி பெற்றார். மகாராஷ்டிரா மாநிலம் சின்ச்வாட் தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அருணாச்சல் பிரதேசம் லும்லா தொகுதியில், பாஜக வேட்பாளர் மேரல்பான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

First published:

Tags: Congress, Election, Election Result, Indian National Congress