Home /News /national /

நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ் தலையற்ற மனித உடலைப் போன்றது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ் தலையற்ற மனித உடலைப் போன்றது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

evks elangovan

evks elangovan

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.

    நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ் தலையற்ற மனித உடலைப் போன்றது என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸுக்கு புதிய தலைவர் தேர்தெடுப்பதைக் குறித்த விவாதம் முற்றியுள்ள நிலையிலும், காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று குழு கூடியுள்ள நிலையிலும், “நேர் குடும்பத்தின் தலைமையில்லாத காங்கிரஸ் என்பது தலையில்லாத மனித உடலைப் போன்றது என்றும், அவர்கள் நாட்டுக்கும், கட்சிக்கும் அளித்திருக்கும் பங்களிப்புதான், பாசிச ஆட்சிக்கு எதிராக நாட்டை இன்னும் தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பின்பு அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வாகி ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இன்னும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு யார் வருவார் என்பது குறித்து தெளிவான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் மீண்டும் ராகுல் காந்தியே பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒருசாரார் கூறி வரும் சூழலில், அதனை ராகுல் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    Published by:Gunavathy
    First published:

    Tags: EVKS Elangovan, Rahul gandhi, Sonia Gandhi

    அடுத்த செய்தி