ஹோம் /நியூஸ் /இந்தியா /

'விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்காக காங்கிரஸ் போராடும்' - உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி கருத்து

'விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்காக காங்கிரஸ் போராடும்' - உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி கருத்து

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு முறையே, பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி போராடும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தேசிய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் ஜனவரி 15-ம்தேதி வரையில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பேரணி, வாகன பேரணி உள்ளிட்டவை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களில் முதலில், பிப்ரவரி 10-ம்தேதி உத்தரப்பிரதேசத்தில் ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு கடைசியாக மார்ச் 7-ம்தேதி உத்தரப்பிரதேசத்திலேயே நிறைவு பெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அறிவிக்கை ஜனவரி 14-ம்தேதி வெளியாகும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21. 24-ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 27-ம்தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : 'மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எண்ணி பெருமை கொள்ள வேண்டும்' : தேர்தல் ஆணையம்

இதேபோன்று ஒவ்வொரு கட்டங்களுக்கும் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. பரிசீலனைக்கு பின்னர் மனுக்களை திரும்பப் பெற 3 நாட்கள் அளிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு முறையே, பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க : 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு : உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளிடையே 4 முனை போட்டி ஏற்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியததாவது-

தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் மார்ச் 10-ம்தேதி, இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வெற்றி நாளாக அமையும். அவர்களின் வெற்றிக்காக, நலனுக்காக காங்கிரஸ் கட்சி போராடும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Priyanka gandhi