’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் சட்டம் நீக்கப்படும்’- காங்கிரஸ் தலைவர் தடாலடி

முஸ்லிம் பெண்கள் பலரும் இந்த மும்முறை தலாக் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் சட்டம் நீக்கப்படும்’- காங்கிரஸ் தலைவர் தடாலடி
தலாக் முறை Representative image
  • News18
  • Last Updated: February 7, 2019, 6:25 PM IST
  • Share this:
முத்தலாக் சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீக்கப்படும் என காங்கிரஸ் மகளிர் அணித் தலைவி சுஷ்மிதா தேவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கான மாநாட்டில் கட்சியின் மகளிரணித் தலைவி சுஷ்மிதா தேவ் பேசினார். சுஷ்மிதா பேசுகையில், “முத்தலாக் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நின்றது. முத்தலாக் சட்டம் பெண்களை வலிமைப்படுத்தும் என்று கூறுகின்றனர். ஆனால், இச்சட்டம் முஸ்லிம் ஆண்களை சிறையில் தள்ள வேண்டும் என்பதற்காக நரேந்திர மோடியின் தந்திர ஆயுதம்.

முஸ்லிம் பெண்கள் பலரும் இந்த முத்தலாக் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதை நான் பாராட்டுகிறேன். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் இந்த முத்தலாக் சட்டம் நீக்கப்படும்” என்று பேசினார்.


இதற்கு பாஜக தரப்பிலிருந்து பெரும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், “உச்ச நீதிமன்றத்துக்கான எவ்வித மரியாதையையும் காங்கிரஸ் தரவில்லை” என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் பார்க்க: ரஜினி தேர்தலுக்கு வந்த கதை
First published: February 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்