இனி வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி தனித்தே தேர்தல்களை சந்திக்கும் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியிருப்பது ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியிருக்கிறது. அதே நேரத்தில் சக கூட்டணி கட்சியான சிவ சேனா, எங்களால் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தான் கூற முடியும் என கூறியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2019ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு போதிய பெரும்பான்மை பலம் கிடைத்த போதிலும் முதலமைச்சரை சுழற்சி முறையில் மாற்றும் திட்டத்திற்கு பாஜக உடன்படாததால், அக்கட்சியுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த சிவசேனா அதிரடியாக வெளியேறி, எதிர் முகாமில் இருந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு கூட்டணி அரசு அமைத்தது. இருப்பினும் ஆரம்பத்தில் இருந்தே இக்கூட்டணிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த குழப்பங்கள் தற்போது விரிசலை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also Read: சமூக வலைத்தள பிரபலம் கிஷோர் கே.சாமி காவல்துறையினரால் கைது!
இந்நிலையில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரான நானா படோல், இனி வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார். மேலும் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனவும் அவர் ஆருடம் தெரிவித்தார்.
Also Read: டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முந்தி நியூசிலாந்து மீண்டும் முதலிடம்!
நானா படோலின் கருத்து குறித்து பதிலளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான நவாப் மாலிக் கூறுகையில், நானா படோல் முதலமைச்சராக விரும்புகிறார், அதில் தவறில்லை ஆனால் அதற்கு முன் அவர்களின் கட்சியையும், தொண்டர் பலத்தையும் பலப்படுத்த வேண்டும். மகா விகாஸ் கூட்டணி 2019 தேர்தலுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்டது, எதிர்வரும் தேர்தல்களின் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதே போல சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், நானா படோல் எங்கள் கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளவர். அவர்கள் அப்படியொரு முடிவு எடுப்பதாக இருந்தால் எங்களால் வாழ்த்துக்களை மட்டும் தான் கூற முடியும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Maharashtra, Shiv Sena