Home /News /national /

மம்தா பாணியில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விளாசிய அகிலேஷ் யாதவ்

மம்தா பாணியில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விளாசிய அகிலேஷ் யாதவ்

Akhilesh yadav- Rahul Gandhi

Akhilesh yadav- Rahul Gandhi

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியம் இடங்கள் தான் கிடைக்கும் என அகிலேஷ் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளுள் ஒன்றாக கைகோர்த்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசிவரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் தற்போது காங்கிரஸ் கட்சியை விளாசியுள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக பாஜக ஆட்சியமைத்துள்ள நிலையில், தொடர்ந்து 2வது முறையாக எதிர்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியாத அளவுக்கு காங்கிரஸ் பரிதாபமாக காட்சியளிக்கிறது. போதாக்குறைக்கு கட்சியின் தலைவர் பதவியை விட்டு ராகுல் விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என தேர்ந்தெடுப்பது தொடர்பாக அக்கட்சித் தலைவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக செயல்பட்டு வருகிறார். தலைமையின் சுணக்கத்தால் பல்வேறு மாநிலங்களிலும் நிலவும் உட்கட்சிப் பூசலை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சவால் தரும் வகையில் உருவெடுக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயன்று வருகிறார். முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாகவும், பாஜகவுக்கு தகுந்த போட்டியை தரமுடியாமல் முடங்கியிருப்பதாகவும் விமர்சித்து வருகிறார் மம்தா பானர்ஜி. காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கும் பணியில் மம்தா ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவர் ஒவ்வொரு மாநிலங்களாக சென்று மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

Also read:  6 குழந்தைகளின் தாய், 14 வயது சிறுவனுடன் ஓட்டம் - 40 வயதில் மலர்ந்த காதல்

இதனிடையே உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியை தன் பங்குக்கு கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அகிலேஷ் யாதவ் ஜான்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது எதிர்வரும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியம் இடங்கள் தான் கிடைக்கும் என பேசினார்.

Also read:   சொந்த நாட்டு பிரதமரையே அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் தூதர் - இம்ரான் கானுக்கு தலைகுனிவு

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாலர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் எப்போதுமே சாமானிய மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கவில்லை என பேசியிருந்தார். சமாஜ்வாதியின் அடாவடி ஆட்சியை யாரும் மறக்க முடியாது. பாஜக மதவாத அரசியலில் ஈடுபட்டால், சமாஜ்வாதி கட்சி சாதி அரசியலில் ஈடுபடுவதாக பிரியங்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Congress, Rahul gandhi, TMC

அடுத்த செய்தி