Home /News /national /

காஷ்மீர் விவகாரத்தில் மோடி அமைதியாக இருப்பது ஏன்? இன்றும் நாடாளுமன்றத்தை அதிரவைத்த எதிர்கட்சிகள்

காஷ்மீர் விவகாரத்தில் மோடி அமைதியாக இருப்பது ஏன்? இன்றும் நாடாளுமன்றத்தை அதிரவைத்த எதிர்கட்சிகள்

எதிர்கட்சிகள் வெளிநடப்பு

எதிர்கட்சிகள் வெளிநடப்பு

ஜி20 மாநாட்டின் போது மோடியும், ட்ரம்பும் என்ன பேசினார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இன்று மோடி, மக்களவைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை.

  • News18
  • Last Updated :
    காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் பேசுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் மோடி கோரிக்கைவைக்கவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்தார். 

    பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை இம்ரான்கான் சந்தித்து பேசினார். அதன்பிறகு பேசிய ட்ரம்ப், ‘இரண்டு வாரங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த மோடி, காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்’ என்று தெரிவித்தார்.

    இந்தச் சம்பவம் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரல் எழுப்பிவருகின்றனர். இந்தவிவகாரம் தொடர்பாக, நேற்று மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியநிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘ட்ரம்ப் கூறியதை மறுத்திருந்தார்.

    இந்தநிலையில் மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினரகள் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக பேசிய மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, ‘ஜி20 மாநாட்டின் போது மோடியும், ட்ரம்பும் என்ன பேசினார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இன்று மோடி, மக்களவைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. 1971-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தானும் இந்தியாவும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப், பொய் சொன்னாரா என்பதை மோடி சொல்லவேண்டும்’ என்று தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    அதன்பிறகு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஜெய் சங்கர் தெரிவித்ததுபோல, ட்ரம்புடன் காஷ்மீர் விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. சிம்லா ஒப்பந்தத்துக்கு புறம்பாக, மூன்றாவது நபர் சமரசம் செய்யவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Donald Trump, Kashmir

    அடுத்த செய்தி