இந்தியாவில் 125 கோடி பேர் ஏழைகளா? இடஒதுக்கீடு விவகாரத்தில் ப.சிதம்பரம் கேள்வி

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்தனர்.

news18
Updated: January 11, 2019, 11:25 AM IST
இந்தியாவில் 125 கோடி பேர் ஏழைகளா? இடஒதுக்கீடு விவகாரத்தில் ப.சிதம்பரம் கேள்வி
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
news18
Updated: January 11, 2019, 11:25 AM IST
பா.ஜ.க அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் 125 கோடி பேர் ஏழைகளாக கணக்கிடப்டுகிறது என்று முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள உயர் சாதி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்தனர்.

மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு!
Loading...

பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம் !இருப்பினும், இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ஆண்டுக்கு 8 லட்சம் என்று வரம்பு நிர்ணயித்தது குறித்து விமர்சனம் எழுந்தது. அதனையடுத்து, உடனடியாக10 % இட ஒதுக்கீடு உறுதி செய்யும் மசோதாவை, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியது.

இதற்கிடையில், பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வருமான வரம்பு நிர்ணயம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருடைய ட்விட்டர் பதிவில், ’பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம் ! மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை.

இது எப்படி இருக்கு! ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...