• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைவர்? - காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது!

காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைவர்? - காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது!

Congress

Congress

கடந்த நாடாளுமன்ற தேர்தலை ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி சந்தித்த நிலையில், காங்கிரஸ் கட்சி மோசமான தேர்தல் தோல்வியை சந்தித்ததை அடுத்து தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

  • Share this:
காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் வரும் அக்டோபர் 16ம் தேதி காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சி சமீபகால தேர்தல்களில் தொடர் சரிவை சந்தித்து வந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி சந்தித்த நிலையில், காங்கிரஸ் கட்சி மோசமான தேர்தல் தோல்வியை சந்தித்ததை அடுத்து தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தார். ராகுல் காந்தியின் விலகலை அடுத்து சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் காங்கிரஸ் கட்சி நிரந்தர தலைவர் இல்லாமலே இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உட்பட 23 தலைவர்கள் கூட்டாக சேர்ந்து கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதினர். இதற்காக கட்சியில் அவர்கள் 23 பேரும் ஓரங்கட்டப்பட்டனர்.

Also Read: | 2015 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடரும் சோகம்.. இப்படியும் ஒரு சா(வே)தனை..

இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் பஞ்சாப் காங்கிரஸில் நடந்த குழப்பங்களே இவற்றுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். நேற்றைய தினம் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக தாக்கி விமர்சித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார், அந்த ட்வீட்டால் காங்கிரஸ் தன் சக எதிர்கட்சிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

Also Read:   உலகின் டாப் 11 எலைட் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்த முகேஷ் அம்பானி – முதல் 10 பேர் யார் யார்?

இது போன்ற பிரச்னைகளுக்கு நடுவே தான் வரும் அக்டோபர் 16ம் தேதியன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என வேணுகோபால் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டில், டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் வரும் 16ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் எனவும், இந்த கூட்டத்தில் தற்போது அரசியல் சூழல், எதிர்வரும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் அமைப்பு ரீதியான தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் நிரந்தர தலைவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: