அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? நாளை அறிவிக்க வாய்ப்பு

இளம் தலைவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற மாற்றுகுரலும் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

Web Desk | news18
Updated: August 9, 2019, 7:17 PM IST
அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? நாளை அறிவிக்க வாய்ப்பு
அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?
Web Desk | news18
Updated: August 9, 2019, 7:17 PM IST
தேசிய காங்கிரஸ் கட்சியின் அடுத்தத் தலைவர் யார் என்ற கேள்விக்கான விடை நாளை தெரியவரும் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் அடுத்தத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. கட்சித் தொண்டர்கள் பலரும் ராகுல் காந்தியின் ராஜினாமாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதும் ராகுல் பதவியை ஏற்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கான இடைநிலைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவில் கட்சித் தலைமை உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் முறையான தேர்தல் மூலம் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.


இடைக்காலத் தலைவர் பதவிக்கான தேர்வுகளில் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

இவ்விருவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் ஆவர். இருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். இளம் வயதிலேயே இளைஞர் காங்கிரஸ் பதவிகளிலிருந்து அமைச்சர் பதவி வரையில் முன்னேறிய தலைவர்களாவர். ஆனால், இளம் தலைவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற மாற்றுகுரலும் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் பார்க்க: கனமழையால் கேரளாவுக்கு ‘ரெட் அலர்ட்’... வெள்ளத்தில் மூழ்கிய மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்கள்!

Loading...

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...