அடுத்த தலைவருக்கான தேடுதல்! ஆகஸ்ட் 10-ம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்

ராகுல் காந்தியே, தலைவராக தொடர வேண்டும் என்று தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் முதல் கடைமட்ட தொண்டர்கள் வரை வலியுறுத்திவந்தனர்.

news18
Updated: August 4, 2019, 2:46 PM IST
அடுத்த தலைவருக்கான தேடுதல்! ஆகஸ்ட் 10-ம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்
ராகுல் காந்தி
news18
Updated: August 4, 2019, 2:46 PM IST
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவுள்ளது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். அவருடைய அறிவிப்பை காங்கிரஸ் காரியக் கமிட்டி நிராகரித்தது. ராகுல் காந்தியே, தலைவராக தொடர வேண்டும் என்று தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் முதல் கடைமட்ட தொண்டர்கள் வரை வலியுறுத்திவந்தனர்.

இருப்பினும், ராகுல் காந்தி பிடிவாதமாக தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்துவருகிறார். இந்தநிலையில், ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Loading...தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் புதன்கிழமை முடிவடைகிறது. அது முடிவடைந்தபிறகு, நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see:

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...