ஹோம் /நியூஸ் /இந்தியா /

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை.. மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு!

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை.. மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு!

நளினி

நளினி

மத்திய அரசு, ஆறு பேரின் விடுதலைக்கெதிராக சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்துவந்த 7 பேரில் பேரறிவாளனைக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசின் தீர்மானத்தை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

  அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, நளினி உட்பட மற்ற 6 பேரையும் விடுதலை செய்யலாம் என்று நவம்பர் 11-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நளினி, முருகன் ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

  போலீசாரை தகாத வார்த்தையால் பேசிய வழக்கு... வேலூர் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர் 

  இதனையடுத்து மத்திய அரசு, ஆறு பேரின் விடுதலைக்கெதிராக சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த மனுவில், தங்கள் தரப்பை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.

  இந்நிலையில், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய காங்கிரஸ் கட்சி சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய அரசின் இந்த சீராய்வு மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Congress, Rajiv Gandhi Murder case