ஹோம் /நியூஸ் /இந்தியா /

2024 தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் இலக்கு... வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

2024 தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் இலக்கு... வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

கட்சியின் தலைமை பொறுப்பை சோனியா கையில் எடுத்துள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

கட்சியின் தலைமை பொறுப்பை சோனியா கையில் எடுத்துள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

கட்சியின் தலைமை பொறுப்பை சோனியா கையில் எடுத்துள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 400 இடங்களில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் அறியப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி, பிரியங்கா, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட 14 மூத்த தலைவர்கள் இடம்பெற்றனர்.

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவார் என்று கடந்த சில வாரங்களாக பேசப்படும் நிலையில் முதன்முறையாக இன்று அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதையும் படிங்க - 4 மாநில இடைத் தேர்தல் முடிவுகள் - அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வி

இந்தாண்டு இறுதிக்குள் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்காக தான் பணியாற்றத் தயார் என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்திருந்தார். ஆனால் இதுபற்றி காங்கிரஸ் தரப்பில் இருந்து பதில் ஏதும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சோனியா உள்பட கட்சியின் மூத்த தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின்போது முக்கியமாக 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க - ராஜினாமா கடிதம் கொடுத்த ஈஸ்வரப்பா.. உண்மை வெளி வரும் என முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி

370 முதல் 400 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான உத்திகளை கூட்டத்தின்போது பிரசாந்த் கிஷோர் விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும், இதன் அடிப்படையில் தேர்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்ற தயார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இது தொடர்பாக இரு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதனை காங்கிரஸ் நிராகரித்தது. தற்போது சோனியா கட்சியின் தலைமை பொறுப்பை கையில் எடுத்துள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Congress, Prashant Kishor, Sonia Gandhi