காஷ்மீர் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு
காஷ்மீர் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு
ஜம்மு காஷ்மீர்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும் அதனை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. பா.ஜ.கவின் செயல் ஜனநாயகப் படுகொலை என்று காங்கிரஸ் வர்ணித்துவருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் இரட்டை நிலைப்பாடு எடுத்த நிலையில், நாளை அக்கட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவை ரத்து செய்வதற்கு ஆகஸ்ட் 5-ம் தேதியே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அந்த தகவலை, நேற்று மாநிலங்களவையில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும் அதனை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. பா.ஜ.கவின் செயல் ஜனநாயகப் படுகொலை என்று காங்கிரஸ் வர்ணித்துவருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மத்திய அரசின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்தச் செயல் காங்கிரஸ் கட்சியில் இரட்டை நிலைப்பாடு இருப்பதை வெளிப்படையாக்கியது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்களுக்கு கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாளை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.