• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மனோகர் பாரிக்கர் மரணம்: கோவாவில்ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

மனோகர் பாரிக்கர் மரணம்: கோவாவில்ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர்

கோவாவில் மனோகர் பாரிக்கர் இறந்ததால் 14 எம்எல்ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ், ஆட்சியமைக்க உரிமை கோரி, ஆளுநர் மிருதுளா சின்ஹாவிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், இதனால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது.

மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில், பாஜகவின் பலம் 14 ஆக இருந்தது. அத்துடன், 2 கட்சிகளைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் என மொத்தம் 23 உறுப்பினர்களுடன் ஆட்சியைப் பிடித்தது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி 16 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்த போதும், ஆட்சியமைக்க போதிய ஆதரவு இல்லாமல் போனது.

அத்துடன், அண்மையில் அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தது பின்னடைவாக அமைந்தது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டி சவுசா காலமானார். தற்போது, முதலமைச்சர் மனோகர் பாரிக்கரும் இறந்ததால், பாஜக-வின் பலம் 12-ஆக குறைந்துள்ளது.

அதேவேளையில், 14 எம்எல்ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ், ஆட்சியமைக்க உரிமை கோரி, ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையில், மனோகர் பாரிக்கருக்காகதான் பா.ஜ.க. அரசுக்கு தாங்கள் ஆதரவளித்து வந்தோம் என்று கோவாவின் ஃபார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் தெரிவித்துள்ளனர். இதனால், பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Also see... கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: