மணிப்பூரில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

மணிப்பூரில் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

மணிப்பூரில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: June 18, 2020, 7:46 PM IST
  • Share this:
மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் ஐக்கியமாகினர். இதைத்தொடர்ந்து தேசிய மக்கள் கட்சியும் பாஜக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளது.

இதேபோன்று திரிணமுல் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவரும் பாஜகவுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதால் பாஜக கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

படிக்கதமிழகத்தில் இன்றும் 2 ஆயிரத்தை தாண்டிய புதிய தொற்று - உயிரிழப்பும் உச்சம்

 

படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு
எனவே, பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடும்படி ஆளுநரை சந்தித்து வலியுறுத்த காங்கிரஸ் திட்டமிட்டது.

இந்த நிலையில், பிரேன் சிங் அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனவும், தங்களுக்கு ஆட்சிமைக்க எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதால், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு காங்கிரஸ், மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு 2017ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களை கைப்பற்றியபோதும், 21 இடங்களை மட்டுமே வென்ற பாஜக, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. தற்போது, மூன்று எம்.எல்.ஏக்கள் விலகியதுடன், கூட்டணி கட்சிகளும் வெளியேறிவிட்டதால் சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 18 ஆகக் குறைந்துள்ளது.

 
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading