முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸ் கட்சி "பலவீனமாக" மாறிவிட்டது: ஃபரூக் அப்துல்லா விளாசல்

காங்கிரஸ் கட்சி "பலவீனமாக" மாறிவிட்டது: ஃபரூக் அப்துல்லா விளாசல்

ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா

காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது. இதை நான் நேர்மையாக சொல்கிறேன். நாட்டை காப்பாற்ற விரும்பினால் காங்கிரஸ் எழுந்து வலுவாக நிற்க வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் கவனிக்க வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது இது நடக்காது என்று ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

காங்கிரஸ் கட்சி பலவீனமாக மாறிவிட்டதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தியாகிகள் நாளையொட்டி சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், சுக்தேவ்

மற்றும் ராஜ்குருவிற்கு மரியாதை செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது. இதை நான் நேர்மையாக சொல்கிறேன். நாட்டை காப்பாற்ற விரும்பினால் காங்கிரஸ் எழுந்து வலுவாக நிற்க வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் கவனிக்க வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது இது நடக்காது

என்னுடைய கட்சி (தேசிய மாநாட்டு கட்சி), JKNPP உள்ளிட்ட கட்சிகள் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக சவால்களை எதிர்கொள்ளும். ஆனால் தேசிய கட்சியான காங்கிரஸ் தற்போது பலவீனமாக மாறிவிட்டது.” என்றார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஃபரூக் அப்துல்லா கூறுகையில், காஷ்மீர் மகாராஜா நம் கலாச்சாரத்தை காப்பதற்காக 1927-ல் சட்டம் ஒன்றை இயற்றினார். ஆனால் வெளியே இருந்து வருகிறவர்கள் இங்கு வந்து வேலைவாய்ப்பை பெறுகின்றனர். எங்கள் குழந்தைகள் வேலைவாய்ப்புக்காக எங்கே செல்வார்கள்? அவர்கள் குருட்டுத்தனமான சட்டங்களை கொண்டு வருகின்றனர் என்று கூறினார்.

பாஜக குறித்து மேலும் அவர் கூறுகையில், எங்கள் மாநிலத்தை அவர்கள் இரண்டாக பிரிக்கமுடியும். ஆனால் எங்களை பிரிக்க முடியாது. மதத்தின் பெயரால் இங்கு வந்து ஓட்டு கேட்கின்றனர். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மதம், மொழி கடந்து இந்த நாடு அனைவருக்குமானது, ஆனால் இன்று நாட்டை பிரித்துக்கொண்டிருக்கின்றனர் என அவர் கூறினார்.

5 மாநில சட்டமன்ற தேர்தல் நேருங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் நீண்ட நாட்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Article 370, Congress, Jammu and Kashmir