Home /News /national /

ஒரு குடும்பம் ஒரு வேட்பாளர்- காங்கிரஸ் தேர்தல் உத்தி பலிக்குமா?

ஒரு குடும்பம் ஒரு வேட்பாளர்- காங்கிரஸ் தேர்தல் உத்தி பலிக்குமா?

காங்கிரஸ்

காங்கிரஸ்

ராஜஸ்தான் உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் தலைவிதியைத் தீர்மானிக்கும் அக்கட்சியின் ‘சிந்தன் ஷிவிர்’ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பம் ஒரு டிக்கெட், அதாவது காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஒரு குடும்பத்துக்கு ஒருவர்தான் வேட்பாளராக அங்கீகரிக்கப்படுவார் என்ற திட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
    ராஜஸ்தான் உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் தலைவிதியைத் தீர்மானிக்கும் அக்கட்சியின் ‘சிந்தன் ஷிவிர்’ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பம் ஒரு டிக்கெட், அதாவது காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஒரு குடும்பத்துக்கு ஒருவர்தான் வேட்பாளராக அங்கீகரிக்கப்படுவார் என்ற திட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    அப்படியென்றால் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி மூவரும் போட்டியிட முடியாது, யாரோ ஒருவர்தான் போட்டியிட முடியும். ஆனால் இதற்கு விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டாவது உறுப்பினர் குறைந்தது ஐந்து வருடங்கள் கட்சிக்காக தீவிரமாக உழைத்தால் அவருக்கு டிக்கெட் கொடுத்தால் தவறில்லை என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    'ஒரே குடும்பம், ஒரே சீட்டு' பரிந்துரையை ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினரான கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் பரிந்துரைத்துள்ளார்.

    “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், இரண்டாவது உறுப்பினர் ஐந்து ஆண்டுகளாக கட்சிக்காக தீவிரமாக உழைத்தால், ஒரு குடும்பம், ஒரு சீட்டு என்ற நிபந்தனை பயன்படுத்தப்படாது” என்றார்.

    மூன்று நாள் நவ்சங்கல்ப் ஷிவிர் விழா ராஜஸ்தானின் உதய்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதற்காக ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் 430 தலைவர்கள் வளர்ந்து வரும் சவால்களைச் சமாளிப்பதற்கான கட்சியின் உத்திகளை ஆலோசித்து வருகிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் உள்ளார்ந்த சீர்த்திருத்தத்திற்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து ஒன் பேமிலி ஒன் டிக்கெட் என்ற திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இதற்கும் விதிவிலக்கு அளித்திருப்பதால் இத்திட்டம் சரிவர அமல்படுத்தப்படுமா? கட்சியின் மற்ற தலைவர்கள் இதற்கு உடன்படுவார்களா? உடன்பட்டால் அவர்களது வாரிசுகள் தற்போது அரசியலில் இருப்பவர்கள் தொடர்ந்து மீண்டும் செயல்படுவார்களா அல்லது அரசியலை விட்டு விலகுவார்களா? அல்லது வேறு கட்சிக்குத் தாவுவார்களா என்ற ஏகப்பட்ட கேள்விகள் இதில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் இந்தத் திட்டம் செல்லுபடியாவதை பற்றி ஐயம் நிறைந்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Congress

    அடுத்த செய்தி