முகப்பு /செய்தி /இந்தியா / சோனியா காந்தியை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

சோனியா காந்தியை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

சசி தரூர் - சோனியா காந்தி

சசி தரூர் - சோனியா காந்தி

அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் வரும் 24ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, கட்சியின் மூத்த தலைவரான சசிதரூர் இன்று சந்தித்துப் பேசினார். முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த 2019 ஆகஸ்ட் 10ஆம் தேதி தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். இதன்பின்னர் கட்சியில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில், கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயலாற்றி வருகிறார்

இதற்கிடையே, ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை மக்கள் மத்தியில் திரட்டி வருகிறார். இதற்கு காங்கிரசார் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இந்த சூழலில், கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான சசிதரூர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார்.

பாஜகவில் ஐக்கியமாகும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்..!

அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் வரும் 24ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம். தேர்தல் நடத்துவதற்கான தேவை ஏற்படும் என்றால், அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படும்.

சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டு இருந்த சசி தரூர், “கட்சியில் உள்ள இளம் நிர்வாகிகள் கட்சிக்குள் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இதுதொடர்பாக 650க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார்“ என்று சசிதரூர் கூறியிருந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தில் முதல் வழக்கு... இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை - நீதிமன்றம் உத்தரவு!

இந்த சூழலில் அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக சசிதரூர் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தலைவர் பதவிக்கான ஆசை தனக்கு இல்லை என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் சசிதரூர் கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த வாரம் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இதில் எந்தெந்த நிர்வாகிகள் வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் பரவலாக இருந்திருக்கிறது. இருப்பினும் பல்வேறு நிர்வாகிகள் ராகுல்காந்தியை மீண்டும் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Congress, Sonia Gandhi