முகப்பு /செய்தி /இந்தியா / ராஜஸ்தான் துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்

ராஜஸ்தான் துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்

அசோக் கெல்லாட், சச்சின் பைலட்

அசோக் கெல்லாட், சச்சின் பைலட்

ராஜஸ்தானில் இரண்டாம் முறையாக நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் துணை முதல்வர் சச்சின் பைலட் பங்கேற்காத நிலையில், அவர் துணை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதல் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜய் மக்கான், ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் ஜெய்ப்பூரில் முகாமிட்டு சச்சின் பைலட் தரப்பை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

மேலும், முதலமைச்சர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதேநேரம், இந்த கூட்டத்தை புறக்கணித்த சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 15 பேருடன் ஹரியானாவில் உள்ள விடுதியில் ஆலோசனை மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இரண்டாவது நாளாக இன்று ஜெய்ப்பூரில் உள்ள பேர்மண்ட் நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தும் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட்-ஐ நீக்கி காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

First published:

Tags: Rajasthan, Sachin pilot