Home /News /national /

புதுக்கட்சி தொடங்கும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்?

புதுக்கட்சி தொடங்கும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்?

Congress

Congress

அரசியலில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கணிக்க முடியாது என குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை மேல் அதிருப்தியில் இருந்து வரும் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், புதுக்கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து அவர் விளக்கம் தந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்ந்தெடுக்கடவில்லை. சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அமைப்புத் தேர்தல் வேண்டும் என வலியுறுத்தி சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள் சேர்ந்து கடிதம் ஒன்றை அனுப்பினர். இந்த கடித விவகாரத்தால் அதிருப்தியடைந்த தலைமை இந்த 23 தலைவர்களையும் ஓரங்கட்டியது. அப்போது முதல் ஜி23 என இவர்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் இவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகாமல் கட்சி தலைமையை விமர்சித்து வருகின்றனர்.

கட்சியால் ஓரங்கப்பட்டவர்களுள் முக்கியமானவராக திகழும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், 40 ஆண்டுகளுக்கும் மேல் காங்கிரஸில் அனுபவம் மிக்கவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக இருந்தவர். நேரு குடும்பத்தின் விசுவாசியாகவும் அறியப்படுகிறார்.

Also read:  மம்தா பாணியில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விளாசிய அகிலேஷ் யாதவ்

இதனிடையே காஷ்மீரில் குலாம் நபியின் ஆதரவு தலைவர்கள் 20 பேர் காங்கிரஸில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தனர். குலாம் நபி ஆசாத்தும் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசிவருகிறார். இதனால் குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள குலாம் நபி ஆசாத், தனியாக புதிய கட்சி தொடங்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை, ஆனால் அரசியலில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கணிக்க முடியாது என தெரிவித்தார். நான் மக்களை சந்தித்து கூட்டங்களில் பேசி வருவதற்கு காரணம் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்த பிறகு மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகள் நின்றுவிட்டன. அதனை புதுப்பிக்கவே கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறேன் என தெரிவித்தார்.

Also read:  6 குழந்தைகளின் தாய், 14 வயது சிறுவனுடன் ஓட்டம் - 40 வயதில் மலர்ந்த காதல்

இந்திரா, ராஜீவ் எனக்கு கட்சியில் அதிக சுதந்திரம் கொடுத்திருந்தனர். தவறு நடக்கும் போது அதை சுட்டிக்காட்ட எனக்கு உரிமை இருந்தது. விமர்சனங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்த போது, என்னை அவரிடம் காட்டி குலாம் நபி ஆசாத்துக்கு எதற்கும் நோ சொல்ல உரிமை இருக்கிறது. அந்த நோ என்பது அவமரியாதை கிடையாது, அது கட்சிக்கு நன்மையை தரும். ஆனால் இன்று நோ சொன்னால் நீங்கல் இல்லாமலே போய்விடுவீர்கள்” என குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

 
Published by:Arun
First published:

Tags: Congress, Jammu and Kashmir, New Political Party

அடுத்த செய்தி