• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குஜராத் துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்

குஜராத் துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் கேள்வி

போதைப்பொருள் தடுப்பு பணியகம், அமலாக்கத் துறை, வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் போன்றவை ஏன் தூங்குகின்றன. இந்த விவகாரத்தில் அதானி முந்த்ரா துறைமுக தரப்பிடம் விசாரணை நடத்தாது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

  • Share this:
    குஜராத் மாநிலத்தில் உள்ள அதானி முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான  ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு நோக்கி காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஹெராயின் ஆப்கானிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரவைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஹெராயின் பிடிப்பட்ட முந்த்ரா துறைமுகம் தொழிலதிபர் அதானிக்கு சொந்தமானதாகும்.

    இதையடுத்து இந்த விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.  இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, மிகப்பெரிய போதைபொருள் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பணியகம், அமலாக்கத் துறை, வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் போன்றவை ஏன் தூங்குகின்றன. இந்த விவகாரத்தில் அதானி முந்த்ரா துறைமுக தரப்பிடம் விசாரணை நடத்தாது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பது யார் என்றும் பாஜக அரசை நோக்கி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும் படிக்க: அமேசானிடம் ₹8546 கோடி லஞ்சம் வாங்கியது யார்? - விசாரணை கோரும் காங்கிரஸ்


    ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் பிடிபட்டுள்ள நிலையில்  இதை தடுக்க வேண்டிய போதைப்பொருள் தடுப்பு பணியகம், அமலாக்க துறை என்ன செய்கின்றன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், போதைப்பொருள் பழக்கம் நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை பாழ் ஆக்குவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான 354கிலோ ஹெராயினை டெல்லி போலீசார் பிடித்தனர். அந்த சம்பவத்தையும் நினைவுக் கூர்ந்த ரன்தீப் சுர்ஜிவாலா, இந்த மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு பின் உள்ளவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததால் பெற்றோருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்!

    இந்த போதைப்பொருள் கடத்தலின் நூல் ஆப்கானிஸ்தானின் தலிபானுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக  உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: