ஐ.ஏ.எஸ் அதிகாரியை பணியிடைநீக்கம் செய்தது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

மோடி, ஹெலிகாப்டரில் சம்பால்பூர் சென்று இறங்கியதும், அவரது ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த விவகாரம் பரப்பை ஏற்படுத்தியது.

news18
Updated: April 18, 2019, 5:32 PM IST
ஐ.ஏ.எஸ் அதிகாரியை பணியிடைநீக்கம் செய்தது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி
தேர்தல் ஆணையம்
news18
Updated: April 18, 2019, 5:32 PM IST
பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த செவ்வாய்கிழமை, ஒடிசா மாநிலம் சம்பால்பூரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதற்காக, மோடி, ஹெலிகாப்டரில் சம்பால்பூர் சென்று இறங்கியதும், அவரது ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, சோதனை நடத்துவதற்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோஹசின் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ட்விட்டர் பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்கள் வாகனங்களில் தேர்தல் ஆணையம் சோதனை செய்ய அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. எதற்காக, பிரதமர் சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? சட்டம் யாருக்காவது சிறப்புச் சலுகை அளிக்கிறதா? என்னுடைய கேள்வி மிக எளிது. எஸ்.பி.ஜி பாதுகாப்புள்ள காங்கிரஸ் தலைவர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். ஏன், அதே விவகாரம் பா.ஜ.கவுக்கு பொருந்தாது?’ என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Loading...Also see:

First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...