Home /News /national /

மனிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் - டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

மனிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் - டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    டெல்லி துணை முதலமைச்சரும் கலால் துறை அமைச்சருமான மனிஷ் சிசோடியாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ நேற்றைய தினம் சோதனை நடத்தியது. புதிதாக கொண்டு வரப்பட்ட மது கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி ரெய்டு நடத்தப்பட்டது. நேற்று காலை முதல் 14 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனையில் மனிஷ் சிசோடியாவின் கம்ப்யூட்டர், தொலைபேசி மற்றும் சில ஆவணங்களை சிபிஐ கைபற்றி சென்றதாக மனிஷ் தெரிவித்தார். மேலும் சிபிஐ விசாரணைக்கு தானும் தன் குடும்பமும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தொடர்ந்து ஒத்துழைப்போம் எனவும் தெரிவித்தார்.

    டெல்லியில் கலால் கொள்கைகளை அமல்படுத்துவதில் ஊழல் நடைபெற்றதாக குற்றசாட்டு எழுப்பப்பட்ட நிலையில் 15 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. அதில் மனிஷ் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

    Also read : திமுக என்றாலே இரட்டை வேடம் தான் - வானதி சீனிவாசன் விமர்சனம்

    இதனையடுத்து டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினர். டிடியு மார்க்கில் உள்ள டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஆம் ஆத்மி அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். 

    இந்நிலையில் மனிஷ் சிசோடியா நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஆம் ஆத்மி அரசின் சிறப்பான செயல்பாடுகளை தடுக்கவே மத்திய அரசு இவ்வாறு ரெய்டு நடத்துவதாகவும் கூறினார்.
    Published by:Siddharthan A
    First published:

    Tags: Congress, Delhi

    அடுத்த செய்தி