ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

ஷஷி தரூர் - மல்லிகார்ஜுனா கார்கே

ஷஷி தரூர் - மல்லிகார்ஜுனா கார்கே

24 ஆண்டுகளில் முதல்முறையாக காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வுசெய்யப்பட உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில், புதிய தலைவருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் போட்டியிடாத நிலையில், கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் தொகுதி எம்பி சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

  மொத்தம் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9497 பேர் வாக்களித்தனர். அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வாக்குப் பெட்டிகளின் சீல் அகற்றப்பட்டு வாக்குகள் எண்ணிக்கை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 ஆண்டுகளில் முதல்முறையாக காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வுசெய்யப்பட உள்ளார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Congress, Congress leader, Indian National Congress, RahulGandhi, Shashi tharoor, Sonia Gandhi